மக்களவை தேர்தலை முன்னிட்டு டூடுல் வைத்து சிறப்பித்தது கூகுள்

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Apr, 2019 11:43 am
lok-sabha-polls-google-shows-how-to-vote-with-election-themed-doodle

மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் டூடுல் வைத்து கூகுள் சிறப்பித்துள்ளது.

வரலாற்று நிகழ்வுகள், பண்டிகை நாட்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை சிறப்பிக்கும் பொருட்டு டூடுல் வைப்பது கூகுளின் வழக்கம்.

அந்த வகையில் இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலை சிறப்பிக்கும் பொருட்டும், வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் கூகுள், டூடுல் வைத்துள்ளது.

மை வைக்கப்பட்ட ஆட்காட்டி விரல் இடம்பெற்றுள்ள இந்த டூடுலை கிளிக் செய்தால், எப்படி வாக்களிப்பது என்பது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close