'பி.எம். நரேந்திர மோடி' படத்தை வெளியிடக்கோரி மனு; ஏப்.15ல் விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 02:37 pm
supreme-court-to-hear-plea-challenging-ban-on-pm-modi-s-biopic

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான 'பி.எம். நரேந்திர மோடி' பட வெளியீட்டுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதற்கு எதிரான மனுவை வருகிற 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு, "பி.எம்.நரேந்திர மோடி" என்ற பெயரில் பாலிவுட்டில் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில், பிரதமர் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். 23 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீபி. எஸ்.சிங். படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் ஜனவரி மாதம் 7ம் தேதி வெளியான நிலையில், வருகிற ஏப்ரல் 11ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். 

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் படம் வெளியாவதால், பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும், மேலும் இது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதில், பட வெளியீட்டிற்கு தடையில்லை, ஆனால் தேர்தல் ஆணையம் கண்டிப்பாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே மும்பை நீதிமன்றம் நேற்று, இது தொடர்பான வழக்கில்  'பி.எம். நரேந்திர மோடி' படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதித்தது. இந்நிலையில், படத்தினை வெளியிடக்கோரி தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனுவை வருகிற 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துகொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close