ஆந்திராவில் மினி பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல்; 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 02:54 pm
six-die-as-lorry-and-minivan-collide-in-anantapur-andhra-pradesh

ஆந்திர மாநிலத்தில் மினி பஸ் மற்றும் ஒரு லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 6 பயணிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் காதிரி - மதனப்பள்ளி நெடுஞ்சாலையில் (Kadiri-Madanapalle highway) பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஒன்று எதிரே வந்த லாரியுடன் மோதியது. இன்று காலை சுமார் 6.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் மினி பஸ்ஸின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 

தொடர்ந்து, அந்த வழியாக சென்ற மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் மற்றும் மீட்புப்படையினர் வந்து மக்களை மீட்டனர். இதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.  மேலும், 9 பேர் வரையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close