உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது: பிரதமர் மோடி

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 09:44 am
the-sacrifices-of-the-dead-will-never-be-forgotten-prime-minister-modi

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை  நிகழ்வின்  நூற்றாண்டு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது என்றும், தியாகிகள்  நினைத்த இந்தியாவை உருவாக்க இன்னும் கடினமாக உழைக்க வேண்டுமென்ற உத்வேகத்தை அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், கிரிக்கெட் வீரரும், அம்மாநில அமைச்சருமான  சிந்து உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close