4 தொகுதி இடைத்தேர்தல்: திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. ஆதரவு!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 11:37 am
cpm-supports-dmk-for-byelection

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்லில், திமுகவுக்கு ஆதரவளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டசபை தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. 

மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், வருகிற ஏப்ரல் 22ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 30ம் தேதி வேட்புமனுத்தாக்கல் மீதான பரிசீலனை நடைபெறும். மே 19 அன்று தேர்தல் நடைபெறும்.  மக்களவைத் தேர்தலோடு, மே 23 அன்று இந்த தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இரண்டும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி (2ம் கட்டம்) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்லில், திமுகவுக்கு ஆதரவளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close