நிர்வாகச் செலவுகளால் உபேர் நிறுவனத்தின் லாபத்தில் பாதிப்பு

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 01:15 pm
operating-expenses-will-affect-uber-s-profit

உபேர் நிறுவனத்தை இயக்குவதற்கான நிர்வாகச் செலவுகள் காரணமாக அதன் லாபத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கபப்ட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தை தலைமையகமாகக் கொண்டது உபேர் நிறுவனம். இன்றைய தேதியில் 63 நாடுகளில் உள்ள 700 நகரங்களில் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் உபேர் டாக்ஸி இயங்கும் மொத்த தொலைவுகளைக் கணக்கீடு செய்ததில், இந்தியா 5ம் இடத்தில் இருக்கிறது.

பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் டாக்ஸியை இயக்குவதற்கான கட்டணம் குறைவானதாக இருக்கிறது. அதே சமயம், மிக அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடு என்பதால், நீண்டகால அடிப்படையில் லாபம் அடைய முடியும் என்று உபேர் நிறுவனம் கருதுகிறது. இருப்பினும், நிறுவனத்தை இயக்குவதற்கான நிர்வாகச் செலவுகளைக் கணக்கிடுகையில் உபேரின் லாபக் கணக்கில் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close