இந்தியாவை நேட்டோ கூட்டு நாடாக அங்கீகரிப்பதற்கான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 01:32 pm
a-bill-introduced-in-us-congress-for-agree-india-as-nato-ally

இந்தியாவுக்கு நேட்டோ கூட்டு நாடு என்ற அந்தஸ்தை வழங்கக் கோரும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், அமெரிக்க ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், இந்தியாவை நேட்டா கூட்டு நாடாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அங்கீகரிக்கும். இதன் மூலமாக, அமெரிக்கா - இந்திய உத்திசார் ஒத்துழைப்பின் அடிப்படையில், இந்தியாவுக்கு எந்தவித தடையுமின்றி நேரடியாக ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க விதிகளின்படி அனுமதி கிடைக்கும்.

இந்த மசோதாவை தாக்கல் செய்த அமெரிக்க எம்.பி. ஜோ வில்சன் இதுதொடர்பாகக் கூறும்போது, “உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அந்தப் பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தூணாக இருக்கிறது. இதனால், அந்நாட்டுக்கான ஏற்றுமதிக் கொள்கைகளில் பலமான சலுகைகளை வழங்க வேண்டியிருக்கிறது’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close