நீட் தேர்வு : இன்று முதல் ஹால் டிக்கெட்!

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2019 09:33 am
neet-exam-admit-cards

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை விண்ணப்பதாரர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர, நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான இத்தேர்வு மே மாதம் 5 -ஆம் தேதி தமிழகம் உள்பட நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கு தமிழகத்திலிருந்து 1.4 லட்சம் பேர் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள், நீட் தேர்வுக்கான தங்களின் ஹால் டிக்கெட்டை இன்று முதல் ஆன் -லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nta.ac.in,ntaeet.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) கூறியுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close