ஜார்க்கண்ட் : 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2019 10:14 am
jharkhand-3-naxals-killed-in-early-encounter

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎஃப்) படையினருக்கும், நக்ஸல்கள் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று நக்ஸல்கள் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎஃப் வீரரும் பலியானார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பெல்பா காட் மலைப்பகுதியில் நக்ஸல்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடவடிக்கையை சிஆர்பிஎஃப் வீரர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று காலை இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது இதில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டா, 4 பைப் வெடிகுண்டுகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன. இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரும் பலியானார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close