மாயாபுரி வன்முறைக்கு டெல்லி அரசின் திறமையின்மையே காரணம் : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Apr, 2019 12:17 pm
mayapuri-violence-is-failure-of-delhi-govt-hardeep-singh

மாயாபுரி வன்முறைக்கு, டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் திறம்பட செயல்படாததே காரணம் என மத்தியமைச்சர் ஹர்தீப்சிங் புரி குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேற்கு டெல்லி பகுதியான மாயாபுரியில் அமைந்துள்ள பழைய பொருள் கடைகளை கடந்த சனிக்கிழமை மாநகராட்சி ஊழியர்கள், டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அகற்ற முயன்றபோது, வியாபாரிகள் அவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். 

இதில் துணை ஆணையர் உட்பட 14 பேர் காயமடைந்த நிலையில், இந்த வன்முறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் திறம்பட செயல்படாததே காரணம் என மத்தியமைச்சர் ஹர்தீப்சிங் புரி குற்றஞ்சாட்டி உள்ளார். 

கடந்த 2015 -ஆம் ஆண்டே அந்த கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தும், அந்த உத்தரவை செயல்படுத்த கெஜ்ரிவால் அரசு தவறிவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். 

இதில் மத்திய அரசுக்கோ, மாநகராட்சிக்கோ தொடர்பில்லை. மக்களின் பிரச்னையாக இருக்கும் காற்று மாசுக்கு பொறுப்பேற்று, கெஜ்ரிவால் மறுவாழ்வுக்கான வழிகளை கண்டறிந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close