விரைவில் வருகிறது ரூ.20 நாணயம்

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2019 01:59 pm
new-20-rs-coin-to-be-released-by-the-end-of-may

நாட்டில் புதிய ரூ.20 மதிப்பிலான நாணயங்கள் மே மாத இறுதியில் புழக்கத்துக்கு வரவுள்ளது. புதிய ரூ.2, ரூ.5 மதிப்பிலான நாணயங்கள் இந்த மாத இறுதியில் புழக்கத்துக்கு வரவுள்ளன.

புதிய நாணயங்கள் அறிமுகம் செய்யப்படுவது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. நாட்டில் இதுவரையிலும் ரூ.25,000 கோடி மதிப்பிலான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. பணவீக்க நிலையை கணித்து, அதற்கு ஏற்றாற்போல புதிய நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 மதிப்பிலான நாணயங்கள் இந்த மாதத்திலும், அடுத்த மாதத்திலும் வெளியாகின்றன. புதிய நாணயங்கள் வெளியானாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நாணயங்களும் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close