துலாபாரத்தின் போது கீழே விழுந்த சசிதரூருக்கு தலையில் பலத்த காயம்!

  அனிதா   | Last Modified : 15 Apr, 2019 01:41 pm
sasi-dharoor-that-fell-down-during-thulabharam

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோவிலில் நடைபெற்ற துலாபாரத்தின் போது, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

கேராளா திருவனந்தபுரம் கோவிலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், திருவனந்தபுரம் வேட்பாளருமான சசிதரூர் இன்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, துலாபாரம் சடங்கில் பங்கேற்ற சசிதரூர் எடைக்கு எடையாக வாழைப்பழம் வைத்துள்ளனர். அப்போது, எடை தாங்காமல் தராசு அறுந்து விழுந்தது. இதில், கீழே விழுந்த சசிதரூருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

காயமடைந்த அவரை அருகில்  இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அவருக்கு தலையில் 6 தையல் போடப்பட்டதாகவும் தற்போது சசிதரூர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close