3 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 9,000 ரூபாயை பறிகொடுத்த பாட்டா ஷோரூம்!

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2019 04:07 pm
bata-fined-rs-9-000-for-forcing-customer-to-pay-rs-3-for-paper-bag

சண்டிகரில் உள்ள பாட்டா ஷோரூமில், வாடிக்கையாளர் ஒருவரிடம், பேப்பர் பேக்கிற்காக 3 ரூபாய் வசூலித்ததால், 9,000 ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் பிரசாத், கடந்த பிப்ரவரி 5ம் தேதி செக்டர் 22ல் உள்ள பாட்டா ஷோரூமில் ஒரு ஜோடி ஷூக்களை வாங்கியுள்ளார். அப்போது, பேப்பர் பேக்கிற்கு என 3 ரூபாய் சேர்த்து அவரிடம் வசூலிக்கப்பட்டது. ரசீதை பார்த்த பின்னர், பேப்பர் பேக்கிற்கான 3 ரூபாயை திருப்பி தரும்படி, தினேஷ் கேட்டுள்ளார். ஆனால், கடைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். 

இதையடுத்து, தினேஷ் நுகர்வோர் மன்றத்தில் இதுகுறித்து புகார் செய்தார். இந்த வழக்கில், நுகர்வோர் ஆணையம், பேப்பர் பேக்கிற்கான 3 ரூபாய், வழக்கிற்கு செலவான ரூ.1,000, வாடிக்கையாளரை துன்புறுத்தியதற்காக ரூ.3,000, சரியான சேவை வழங்காததால் ரூ.5,000 என மொத்தம் 9,003 ரூபாய் தினேஷிற்கு இழப்பீடு தர, பாட்டா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து, பாட்டா நிறுவனம் அனைத்து ஷோரூம்களிலும், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே பேப்பர் பேக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close