உஷார் மக்களே! போலி செய்திகளை பரப்பினால் வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் 'ப்ளாக்' ஆகி விடும்!

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2019 04:23 pm
whatsapp-to-block-numbers-which-spread-misinformation-during-elections-report

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருவதையடுத்து, போலியான தகவல்களை அனுப்பும் நபர்களின் அக்கவுண்ட் முடக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . மேலும், கடந்த ஏப்ரல் 11ம் தேதி, இந்தியாவில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தல் சமயத்தில், வடமாநிலங்களில் சில வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய நிலையில், மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து, சமீபத்தில் போலியான தகவல்கள் அல்லது கட்சி சார்ந்த தகவல்களை பேஸ்புக்கின் பல்வேறு பக்கங்களில் ஷேர் செய்ததால், 687 பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனமும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு, NASSCOM நிறுவனத்துடன் இணைந்து நாம் வாட்ஸ் ஆப்பில் அனுப்பும் செய்திகளை கண்காணித்து வருகிறது. 

அதன்படி, போலியான செய்திகள்/ அரசியல் கட்சிகள் சார்ந்த தகவல்களை பரப்பினால், அவர்களது வாட்ஸ் ஆப் அக்கவுண்ட் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற சமயத்தில், தேர்தலுக்கு முந்தைய நாள் சில வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் ஆப் கணக்குகள் எல்லாம் மீண்டும் செயல்படுமா? என்பது குறித்து நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும்  தரப்படவில்லை. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close