சிறுநீரகத்தை விற்க அனுமதி கோரிய சுயேட்சை வேட்பாளர்

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Apr, 2019 12:04 pm
give-me-rs-75-lakh-or-allow-me-to-sell-kidney-balaghat-candidate-to-ec

தேர்தல் செலவீனங்களுக்காக தோ்தல் ஆணையம் 75 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் அல்லது எனது சிறுநீரகத்தை விற்க அனுமதி வழங்க வேண்டுமென, மத்திய பிரதேசம் பாலகாட் தொகுதி சுயேட்சை வேட்பாளர் கிஷாா் சம்ரிதி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், அதிகபட்சமாக 75 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில், தேர்தலுக்கு செலவிட தன்னிடம் போதிய நிதியில்லை என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ள பாலகாட் தொகுதி சுயேட்சை வேட்பாளரும் சமாஜ்வாதி கட்சியை சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ-வுமான கிஷோர் சம்ரிதி, தேர்தல் செலவீனங்களை எதிர்கொள்ள தோ்தல் ஆணையம் 75 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் அல்லது தனது சிறுநீரகத்தில் ஒன்றை விற்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close