பெண்களை மசூதிக்குள் அனுமதிக்கக் கோரும் வழக்கு - வஃபு வாரியத்துக்கு நோட்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 12:31 pm
sc-issues-notice-to-concerned-parties-on-woman-entry-to-mosque-case

மசூதிகளில் பெண்களை அனுமதிக்க கோரும் மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, தேசிய மகளிர் ஆணையம், மத்திய வஃபு வாரிய கவுன்சில், அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் உள்ளிட்ட தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது ஜமாத்-ஏ-இஸ்லாமி, முஜாஹித் ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி உண்டு. அதேசமயம், சன்னி பிரிவினரின் மசூதிகளில் பெண்கள் வந்து செல்ல தனி நுழைவு வாயில் உண்டு என்றாலும், பிரதான அரங்கில் தொழுகை நடத்த அனுமதி கிடையாது.

இந்நிலையில், பெண்களையும் மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதியர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஆண்களையும், பெண்களையும் பாகுபடுத்திப் பார்க்குமாறு குரானில் எங்குமே தெரிவிக்கப்படவில்லை என்றும், இறை நம்பிக்கை குறித்து மட்டுமே அதில் போதிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும், பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் மனுதாரர்கள் கூறியிருந்தனர். பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கைகள் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு, வஃபு வாரிய கவுன்சில் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close