கஞ்சாவில் இருந்து மருந்து தயாரிக்க மும்பை நிறுவனம் திட்டம்

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 03:33 pm
research-of-a-startup-company-for-cannabis-based-medicines

கஞ்சாவை மூலப் பொருளாகக் கொண்டு மருந்து தயாரிப்பது குறித்த ஆராய்ச்சிகளை மும்பையைச் சேர்ந்த நிறுவனமான BOHECO மேற்கொள்ளவுள்ளது.

சணல் விதைகளில் இருந்து மருந்து தயாரிக்கும் பணியை இந்நிறுவனம் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது. கஞ்சா போதைப்பொருளாக பயன்படுகிறது உலகின் பல நாடுகளில் அதை பயிரிடவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கஞ்சாவை மருத்துவப் பொருளாக பயன்படுத்தும் நாடுகளும் உண்டு.

இந்நிலையில், அத்தகைய சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள போஹெகோ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் பெஸ்டான் ஜமாஸ் கூறுகையில், ”இதை மற்ற விஷயங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். அதன் செயல்திறனை ஆராய்வதற்கு ஆர்வமாக உள்ளது. திராட்சை விதைகள், சணல் விதைகளில் இருந்து எண்ணெய் தயாரிக்க முடிகிறது. மருத்துவ பயன்பாட்டுக்கும், பிற விஷயங்களுக்கும் பயன்படுகிறது. இந்த விதைகளுக்கு சொந்தமில்லாத நாடுகளிலேயே அதை செய்யும்போது, அதன் சொந்த நிலமான இந்தியாவில் ஏன் கூடாது?’’ என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close