ஜெட் ஏா்வேஸ் நிறுவனம் மூடப்படுகிறதா?

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Apr, 2019 02:25 pm
jet-airways-crisis-lenders-divided-on-interim-funding-crucial-board-meeting-today

கடனில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதா வேண்டாமா  என்பது குறித்து முடிவெடுக்க இயக்குனர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 

25 ஆண்டுகளாக விமான சேவை வழங்கி வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அது வங்கிகளிடம் பெற்ற 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பிச்  செலுத்தாமல் திணறி வருகிறது. தங்களுக்கு தற்காலிகமாக நிதி வழங்கி உதவிடுமாறு சில நிறுவனங்களிடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது. 

ஆனால் அந்த கோரிக்கையை கடன் வழங்கும் நிறுவனங்கள் ஏற்க மறுத்துவிட்டன. கடன் பிரச்னை காரணமாக அந்த நிறுவனத்தின் அனைத்து சர்வதேச விமானங்களும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வந்தன.  மேலும் பல ஆயிரம் ஊழியர்கள் மற்றும் விமானிகளுக்கு சம்பள பாக்கி உள்ளது. 

தங்கள் சம்பள பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வுகாண அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பறக்கும் உரிமைத்தை தக்க வைத்து கொள்ள 6 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தொடர்ந்து இயக்குவதா வேண்டாமா  என்பது குறித்து முடிவெடுக்க இயக்குனர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close