வாக்குச்சாவடிக்குள் மாெபைல் போன் கொண்டு செல்ல தடை!

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 02:36 pm
voters-with-mobile-phones-will-not-be-allowed-inside-of-polling-booth

மக்களவை, இடைத்தேர்தலில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள், வாக்குச் சாவடிக்குள் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. 

தமிழகத்தில், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்காக, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் பூத்களில், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

அவற்றின் பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படை, கையில் துப்பாக்கிய ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தங்கள் வாக்கை பதிவு செய்யப்போகும் வாக்காளர்கள், வாக்குச் சாவடிக்குள், மாெபைல் போன்களை எடுத்துச் செல்ல தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. 

வாக்குச்சாவடி மட்டுமின்றி, வாக்குச்சாவடிக்கு, 100 மீட்டருக்கு முன்பாகவே இந்த தடை அமல்படுத்தப்படும் என்பதால், வாக்காளர்கள், தங்கள் மாெபைல் போன்களை, வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்வது நல்லது. வாக்குச் சாவடிக்கு சென்று, அங்குள்ள அதிகாரி சாேதனையிட்டால், அவர் உங்களை வாக்களிக்க விடமாட்டார். 

தவிர, வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் மாெபைல் போன்களை பாதுகாக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close