டெல்லி- மெட்ரோ ரயில் கதவில் புடவை சிக்கியதில் விபரீதம்!

  ஸ்ரீதர்   | Last Modified : 16 Apr, 2019 05:15 pm
with-saree-stuck-in-metro-train-door-delhi-woman-gets-dragged-on-platform

டெல்லியில், மெட்ரோ ரயிலின் தானியங்கி கதவில் புடவையின் முந்தானை  சிக்கிக்கொண்டதால் பெண் ஒருவர் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

நொய்டா எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற மெட்ரோ ரயிலில், கீதா என்ற பெண் தனது மகளுடன் பயணித்தார்.

மோதி நகர் ரயில் நிலையத்தில் அவர்கள் இறங்கியபோது, கீதாவின்  புடவை முந்தானை தானியங்கி கதவில் சிக்கிக்கொண்டது.

அதையடுத்து அவர் சுதாரிப்பதற்குள் ரயில் அங்கிருந்து புறப்படவே, கீதா கீழே சரிந்து விழுந்து சிறிது தூரம் பிளாட்பாரத்தில் இழுத்து செல்லப்பட்டார்.

ரயில் பயணி ஒருவர் அவசர ஒலியை அழுத்தியதை தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தலையில் பலத்த காயமடைந்த கீதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close