வாக்காளர் பட்டியிலில் உங்கள் பெயர் இருக்கிறதா...?

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 10:48 am
search-your-name-in-electoral-list

கர்நாடக மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளில் வரும் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியிலில் இருக்கிறதா என்பதை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.  எப்படி...?

கர்நாடக மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ceokarnataka.kar.nic.in/mirrorlinks.aspx ல் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு தனித்தனியாக சேவைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் தங்கள் தொகுதியின் வாக்குப்பதிவு தேதியை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர், ”Search with EPIC Number" என்பதில் உள்நுழைந்து, மாவட்டத்தின் பெயரையும், வாக்காளர் அடையாள அட்டை எண்ணையும் பதிவிட வேண்டும். இதன் பின்னர் வரும் திரையில், உங்கள் பெயருடன் கூடிய விவரங்களுடன், எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட விவிரங்களை நீங்கள் காணலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close