மோடி, பாரிக்கரை திட்டிய பாதிரியார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 11:40 am
goa-priest-seeked-unconditional-apology-for-scolding-modi-parikkar

கோவா மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கர், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை மிகக் கடுமையாக விமசித்த பாதிரியார் ஒருவர், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

கோவாவில் மக்களவைத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், கொங்கனியில் உள்ள கத்தோலிக்க தேவாயலயம் ஒன்றில், பாதிரியார் கான்சியாகோ டி சில்வா பேசியபோது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மக்களின் குறைகளை கண்டு கொள்ளாமல் போனதால்தான் பாரிக்கருக்கு உடல்நலன் சரியில்லாமல் போனது என்றும், தவறு செய்தால் பிரதமர் என்றாலும், பிரதமருக்கு தந்தை என்றாலும் இறைவன் தண்டிப்பார் என்றும் அவர் கூறினார். அமித் ஷாவையும் தரக்குறைவாக விமர்சித்தார்.

இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது. இதன் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் பாதிரியாரை நேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது தனது தவறை உணர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக அவர் கூறினார். அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்ட போதிலும், இனிமேல் மத நம்பிக்கை விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறும், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close