ராஜஸ்தானில் புயல் மழைக்கு 6 போ் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Apr, 2019 11:42 am
6-killed-in-rain-related-incidents-in-rajasthan

ராஜஸ்தானில் புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன.

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2 தினங்களில் புயல் தாக்கும் எனவும், அதைத்தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்த புயல் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது. 

மேலும் காற்றின் வேகம் அதிகமாகும் என்பதால் நகரின் முக்கிய பகுதிகளில்  மின்சாரம் தடை செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close