பிரதமர் மோடி குறித்த இம்ரான் கானின் கருத்து காங்கிரஸின் சூழ்ச்சி - நிர்மலா சீதாராமன்

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Apr, 2019 02:20 pm
nirmala-sitharaman-blames-congress-on-balakot-attack

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சி தான் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலில், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான, அமைதி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இம்ரான் கான் பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன. 

இது குறித்து தனியாா் செய்தி நிறுவனத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று பேட்டியளித்தாா். அப்போது பேசிய அவா், இதுப்போன்ற கருத்துகள் ஏன் பரவுகின்றன என தெரியவில்லை. பிரதமர் மோடியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள், பாகிஸ்தான் சென்று இம்ரான் கானை சந்தித்து திட்டம் தீட்டி வருகின்றனர். 

அதேபோல் இம்ரான் கானின் இந்த கருத்துக்கும் காங்கிரசின் சூழ்ச்சியே காரணமாகும். இப்படி செய்வதால் என்ன தான் நடந்துவிடப்போகிறது என புரியவில்லை என்று அவா் தொிவித்துள்ளாா். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close