பாஜக எம்.எல்.ஏ கொலையில் தொடர்புடைய இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 12:16 pm
2-maoists-allegedly-involved-in-bjp-legislator-s-killing-shot-dead

சத்தீஷ்கர் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ கொலையில் தொடர்புடைய இரண்டு மாவோயிஸ்டுகள் இன்று பாதுகாப்புப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ பீமா மாண்டவி கடந்த 9ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள், பாஜக எம்.எல்.ஏ மற்றும் அவரின் பாதுகாப்புக்கு உடன் சென்ற வீரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பாஜக எம்.எல்.ஏ மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து மாவோயிஸ்டுகளை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், இன்று மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் இரண்டு மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்  கொல்லப்பட்டனர். மேலும், ஒருவன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த மாவோயிஸ்டுகளுக்கு பாஜக எம்.எல்.ஏ கொலையில் தொடர்பு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close