ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் டெல்லியில் போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 03:17 pm
jet-airways-employees-protest-in-delhi

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டத்தை அடுத்து, அந்த நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோகரி, அந்த நிறுவன ஊழியர்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக தனது விமான போக்குவரத்து சேவையை குறைத்து வந்தது. இந்நிலையில், அந்த நிறுவனம் வழங்கி வந்த விமான சேவை முழுவதும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும்,  ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் இயங்க வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க ஜெட் ஏர்வேறு நிறுவனமும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், அந்த நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close