சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு: வீரர் படுகாயம்

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 03:51 pm
bomb-blast-in-chattisgarh-itbp-injured

சத்தீஸ்கரில், வாக்குப்பதிவு நடைபெறும் பகுதி அருகே, சக்திவாய்ந்த ஐ.இ.டி., குண்டு வெடித்ததில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்னந்த்காவ் பகுதியில், இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச் சாவடிக்கு அருகே உள்ள, கோர்ச்சா - மன்பூர் சாலையில், இன்று காலை 11 மணி அளவில், சக்தி வாய்ந்த, ஐ.இ.டி., குண்டு வெடித்தது. 

இதில் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, இந்தோ திபெத் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் மான் சிங் படுகாயம் அடைந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close