கால் விரலால் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய பெண்ணுக்கு சல்யூட்!

  விசேஷா   | Last Modified : 18 Apr, 2019 05:20 pm
sabitha-monis-who-dont-have-tow-hand-today-caste-her-vote-by-using-legs

இரு கைகளும் இல்லாத  நிலையில், கால் விரல் உதவியால் வாக்களித்து, கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர், ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, அனைத்து வகை அடையாள ஆவணங்களும் இருந்தும் கூட, நம்மில் பலர், தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாகத்தான், 100 சதவீத வாக்குப் பதிவு என்ற, தேர்தல் கமிஷனின் முயற்சி, கனவாகவே போகிறது. 

ஒரு விரல் புரட்சி என அழைக்கப்படும், ஜனநாயக கடமையான வாக்களிக்கும் செயலை, இரு கைகளும் இல்லாத பெண் ஒருவர், தன் கால் விரலால் செய்து முடித்து, இந்திய குடிமகளின் கடமையை சரி வர நிறைவேற்றியுள்ளார். 

ஆம்... கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர், சபிதா மாேனிஸ், 30. பிறந்தது முதலே இரு கைகளும் இல்லாத இவர், வாழ்க்கையில் முடங்கிப் போகாமல், தன் சொந்தக் காலில் நிற்க பழகினார். அதன் பலனாய், பள்ளிப் படிப்புடன் நிற்காமல், பட்டப்படிப்பையும் முடித்தார். 

இவருக்கு, 18 வயது நிறைவடைந்ததும், வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. கை விரல் இருந்தால் தானே, அதில் மை வைத்து, ஓட்டளிக்க முடியும் என எண்ணாமல், தன் கால் விரலில் மை வைக்கச் சொல்லி, கால் விரலாலேயே வாக்களித்தார். அன்று முதல், தற்போது வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், சபிதா தவறாமல் வாக்களித்துள்ளார். 

கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடாவில் உள்ள பெல்தங்கடி வாக்குச்சாவடியில், அவர் இன்று வாக்களித்தார். அவர் வாக்களித்ததற்கு அடையாளமாக, அவரின் கால் விரலில் மை வைக்கப்பட்டது. 

உடல் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இருக்கும் எத்தனையோ பேர், நம் ஒருவரின் ஒரே ஒரு வாக்கால் என்ன அதிசயம் நிகழ்ந்துவிடப்போகிறது என எண்ணி, அன்று கிடைக்கும் விடுமுறையில், உண்டு, உறங்கி, ஓய்வெடுத்து, டிவியில் பொழுதை கழிக்கம் நிலையில், இரு கைகளும் இல்லாத போதும் கூட, கால் விரல் உதவியால் வாக்களித்து தன் ஜனநாயக கடமையாற்றிய சபிதாவுக்கு, Newstm சார்பில் ஓர் சல்யூட்!

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close