இயேசுவின் தியாகங்களை நாம் எண்ணி பார்க்க வேண்டும் : பிரதமா் மோடி ட்விட்

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Apr, 2019 12:20 pm
pm-modi-tweets-on-good-friday

இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி டிவிட் செய்துள்ளார்.

கிறிஸ்தவர்களுக்கு புனித வெள்ளி மிக முக்கியமான நாளாகும். இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும்.

இந்த நிலையில், புனித வெள்ளியை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " இயேசு கிறிஸ்துவின் தியாகங்களை நாம் இன்று நினைத்து பார்க்க வேண்டும். அவரின் வாழ்க்கை, சிறந்த சிந்தனைகள், மிகவும் தைரியமான மனப்பான்மை ஆகியவை மக்களுக்கு பெரிய வலுவூட்ட கூடியவை. அவரின் அறிவுரைகள் இந்த உலகில் இருந்து அதர்மத்தையும், சமத்துவமின்மையையும் அகற்றக்கூடியது " என்று மோடி தொிவித்துள்ளாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close