அனைத்து எமர்ஜென்சிக்கும் ஒரே நம்பர் 112 !

  ஸ்ரீதர்   | Last Modified : 19 Apr, 2019 06:20 pm
20-states-join-pan-india-single-emergency-helpline-number-112

இந்தியாவின் அவசர அழைப்பு எண் 112 சேவையில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட மொத்தம் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இது, நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாக செயல்படும். 

தனிநபர் ஒருவருக்கு அவசர சேவை தேவைப்படும்போது 112 என்ற எண்ணை அழைக்கலாம். இதன் மூலம், போலீசுக்கு 100, தீயணைப்புக்கு 101 மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090 ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் இந்த சேவை செயல்படுத்தப்படுகிறது. 

அமெரிக்காவில் 911 என்ற அவசர அழைப்பு எண் சேவை நடைமுறையில் உள்ளது. அதுபோன்று இந்த சேவை அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாச்சல பிரதேசம், அருணாசல பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான நிகோபர் தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையு, ஜம்மு காஷ்மீர் மற்றும் நாகலாந்து உள்ளிட்டவை அவசர அழைப்பு எண் 112-ல் இணைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close