என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Apr, 2019 11:14 am
tiwari-nd-tiwari-s-son-murdered-likely-with-pillow-cops

என்.டி.திவாாியின் மகன் ரோகித் திவாாி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் என்.டி.திவாரி. இவருடைய மகன் ரோகித் சேகர் திவாரி. டெல்லியில் வசித்து வந்தார். 2 நாட்களுக்கு முன் ரோகித் சேகர் திவாரி அவருடைய வீட்டில் மூக்கில் ரத்தம் வடிய மயங்கி கிடந்தார். 

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை அறிக்கையில், ரோகித் சேகர் திவாரி கழுத்து நெரிக்கப்பட்டதும், அவர் மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்தது. அவருடைய மரணம் இயற்கையானது அல்ல என்றும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரோகித் சேகர் திவாரி வீட்டில் ஆய்வு செய்து வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close