ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் பலருக்கு பணி அளித்த ஸ்பைஸ் ஜெட்

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Apr, 2019 12:37 pm
spicejet-hires-500-employees-including-100-pilots-from-grounded-jet-airways

பணியிழந்த ஜெட் ஏா்வேஸ் ஊழியா்களுக்கு பணி வழங்க ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் முன் வந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் அதிகரித்து கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது. தினசரி செலவினங்களுக்கும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவைகள் அனைத்தையும் கடந்த புதன்கிழமை தற்காலிகமாக நிறுத்தி விட்டது.

இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் பணி இழந்த ஊழியர்களுக்கு உதவ முன் வந்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள், விமான ஊழியர்கள், தொழில்நுட்ப மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

இவர்களில் பலருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தற்போது பணி வழங்க உள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 100 விமானிகள் 200 விமான ஊழியர்களுக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே பணி வழங்கி உள்ளது.

தற்போது மேலும் 24 புதிய விமான சேவைகளை அறிவித்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அதற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களை பணி அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close