கைதியின் முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ‘ஓம்’ என்று எழுதிய சிறை கண்காணிப்பாளர்

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Apr, 2019 01:34 pm
prisoner-alleges-tihar-jail-superintendent-branded-om-on-his-back

டெல்லி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதியின் முதுகில், பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என எழுதியது தொடர்பாக டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள  கைதி ஒருவர், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 

2 நாட்களாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டதுடன், அவரது முதுகில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓம் என்று எழுதி உள்ளனர். சிறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சவுகான் இந்த செயலை செய்துள்ளார்.

 இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதி, தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.  

சிறையில் நடந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close