இங்கிலாந்து ராயல் சொசைட்டியில், கடந்த 360 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பெண் தேர்வு!

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 05:21 pm
gagandeep-kang-is-the-first-indian-woman-scientist-to-be-elected-royal-society-fellow-in-360-years

இங்கிலாந்து ராயல் சொசைட்டி அமைப்பில், 360 ஆண்டுகளில் முதல் முறையாக,  இந்திய பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து ராயல் சொசைட்டி என்ற அமைப்பில் ஆராய்ச்சியாளராக பணிபுரிய சமீபத்தில், 51 அறிவியலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், 5 ஆண்களோடு பெண் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 360 ஆண்டுகளில் இந்திய பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. 

அவரது பெயர் கங்கன்தீப் கங்க். இவர் ஃபரிதாபாத்தை தலைமையிடமாக கொண்ட, ட்ரான்ஸ்லஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டின் இயக்குனராக உள்ளார். இது, இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் பல்கலைக்கழகம் ஆகும். 

இவர், இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர். முக்கியமாக, குழந்தைகளுக்கு மிக நுண்ணிய வைரஸினால் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதற்கான  மருந்துகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார். 300க்கும் அதிகமான அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். மேலும், சர்வதேச ஆராய்ச்சி நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் ஆலோசகராவும் இருக்கிறார். 

இவருக்கு, நாட்டின் பல்வேறு அறிவியலாளர்கள், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close