ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் வேறு நிறுவனங்களில் இணைவார்கள்: ஜெயந்த் சின்ஹா

  ஸ்ரீதர்   | Last Modified : 20 Apr, 2019 05:26 pm
jet-airways-employees-will-be-absorbed-by-other-airlines-jayant-sinha

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டதால், 20 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ள நிலையில், திறமையான ஊழியர்கள் விமானப் போக்குவரத்து துறையில் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கிங்பிஷ்ஷர் விமான நிறுவனம் மூடப்பட்ட பின்னர், அதில் பணியாற்றிய ஊழியர்கள், வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். அதே போல் தற்போதும் நடைபெறும். ஆனால் அதற்கு சில காலம் ஆகலாம். வளர்ச்சி அடைந்து வரும் விமானப் போக்குவரத்து துறையில், நீண்ட கால அடிப்படையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன" என ஜெயந்த் சின்ஹா கூறினார்.

இதனிடையே, ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட ஊழியர்கள், 500 பேரை, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் பணியில் அமர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close