பாகிஸ்தானுடனான எல்லை வழி வர்த்தகத்திற்கு முற்றிலும் தடை

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2019 08:54 pm
india-bans-trade-with-pakistan-by-loc

எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலும், போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தலை தடுத்து நிறுத்தும் வகையிலும், பாக்., எல்லை வழியாக சாலை வழி நடைபெறும் அனைத்து வர்த்தகத்தையும் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்தியா - பாக்., எல்லை வழியே, சாலை மார்க்கமாக, பல்வேறு வர்த்தகம் நடைபெற்று வந்தது. குறிப்பாக, அட்டாரி - வாகா எல்லை வழியாக, பல்வேறு சரக்குப் போக்குரவத்து நடைபெற்று வந்தது. இங்கிருந்து முக்கிய பொருட்கள் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தன. 

இந்நிலையில், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லை வழியாக, பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருட்கள், ஆயுங்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்தது. இதன் மூலம், நம் நாட்டில் அமைதியை சீர் குலைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. 

இவ்வகை சட்டவிரோத, மக்கள் நலனுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாகிஸ்தான் நாட்டுடனான எல்லை வழி வர்த்தகத்தை முற்றிலும் நிறுத்துவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு, நேற்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. 

இதன் மூலம், போதைப் பொருள், ஆயுதக் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, நம் நாட்டு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close