ஸ்டெப்னி டயரில் பதுக்கப்பட்ட ரூ.2.3 கோடி : மோப்பம் பிடித்த வருமானவரித் துறை !

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 11:58 am
it-department-seizes-rs-2-3-crore-from-spare-tyre-of-car-heading-to-shivamogga-bhadravati

கா்நாடகாவில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய, காாின் ஸ்டெப்னியில் வைத்து கடத்திய 2.3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விதத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில், சப்பாத்திக்குள் பணத்தை வைத்து கடத்தினர்.

இப்போது, காரின் ஸ்டெப்னி டயரில் கத்தை, கத்தையாக பணத்தை வைத்து, வாக்காளர்களுக்கு வினியோகிக்க சென்றப்போது பிடிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

கர்நாடகாவில் வருமான வரித்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெங்களூருவிலிருந்து சிமோகா செல்லும் சாலையில் வந்த ஒரு காரை மடக்கி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது காரின் ஸ்டெப்னி டயரில் 2 ஆயிரம் நோட்டுகளாக 2.3 கோடி பணம் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான ஆவணங்கள் இல்லாததால்  அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close