லாரி - பேருந்து நேருக்கு நேர் மோதல்: பயணிகள் 7 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2019 12:29 pm
seven-killed-in-up-truck-bus-collision

உத்தரப் பிரதேச மாநிலத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்திற்கு அருகே, ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று,  அதற்கு முன்னர்  சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின்  முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. 

தகவலறிந்த காவல் துறை மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து 7 பேரின் உடல்களை மீட்டனர். படுகாயமடைந்த 34 பேர்  அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து  போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close