மத்திய அமைச்சரிடம் கண்ணீர்விட்டு கதறிய ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 12:27 pm
jet-airways-delegation-meets-arun-jaitley-seeks-pending-salaries

நிதிநெருக்கடியால் விமான சேவையை நிறுத்திக் கொண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து இப்பிரச்சினையில் அரசு தலையிட வேண்டும் என்று முறையிட்டனர். 

தங்களுக்கு 4 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் அளித்த ஊழியர்கள், ஒருமாத சம்பளத்தையாவது உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை மீண்டும் தொடங்க ஆவன செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும் அவர்கள் நிதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளனா்.

இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண் ஜெட்லி உறுதி அளித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close