இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

  ஸ்ரீதர்   | Last Modified : 21 Apr, 2019 05:59 pm
cong-condemns-blasts-in-sri-lanka

இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு இந்தியா உள்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என அதில் தொிவித்துள்ளாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close