இலங்கை குண்டுவெடிப்பு - கர்நாடக ஆளுங்கட்சித் தொண்டர்கள் இருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2019 11:41 am
2-jd-s-workers-from-karnataka-died-in-sri-lanka-blast

இலங்கையில் நேற்று அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில், கர்நாடகத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இருவர் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

கொழும்பு, நீர்கொழும்பு, மட்டகளப்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நேற்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களில் பலியானாவர்களின் எண்ணிக்கை 290-ஆக அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் இந்தியர்கள் 5 பேர் பலியானது நேற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 7 பேர் இலங்கைக்கு சுற்றுலா வந்ததையும், அவர்களில் ஹனுமந்தாரயப்பா, ரங்கப்பா ஆகிய இருவர் கொல்லப்பட்டிருப்பதையும் அங்குள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close