இந்தியா முழுவதும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் டிஜிட்டல் சேவையில் இணைப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Apr, 2019 11:44 am
tcs-modernises-1-5-lakh-post-offices-under-multi-year-deal-with-india-post

இந்தியாவில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள், டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வழங்கிய புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பம் வாயிலாக நவீன மயமாக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, 2013 ஆம் ஆண்டு தபால் துறையிடம் இருந்து டிசிஎஸ் நிறுவனம் பெற்றது. தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி, காப்பீடு போன்ற அதிக சேவைகளை திறம்பட அளிக்கும் விதத்தில் தகவல் தொழில்நுட்பங்கள் நவீனப்படுத்த வேண்டும் என்பதே இதற்கான திட்டமாகும்.

அதன்படி, மின்னஞ்சல் இயக்கம், நிதி மற்றும் கணக்கு, மனிதவள செயல்பாடு போன்றவற்றில் தீர்வு காணப்பட்டதுடன், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால்நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால் உலக அளவில் மிகப்பெரிய மின் தபால் நெட்வார்க் உருவாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் 5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு உறுதுணையாக இருப்பதுடன், நாளொன்றுக்கு 30 லட்சம் தபால் பரிமாற்றங்களை டிஜிட்டல் முறையில் அளிக்க முடியும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close