இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் பாஸ்வார்டை கசிய விட்ட ஃபேஸ்புக்!

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2019 02:02 pm
facebook-leaks-instagram-passwords

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் பாஸ்வோர்டுகளை ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாக்கத் தவறியுள்ளது. இதனால், பயனாளர்களின் தனிப் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுகிறது.

ஃபேஸ்புக் பயன்படுத்தும் பயனாளர்கள், அதிலிருந்தபடியே பிற சமூக வலைதளங்களையும் கையாள முடியும். அதற்கு அவர்கள் பாஸ்வோர்ட் மற்றும் பயனாளர் ஐ.டி.யை பதிவு செய்திருக்க வேண்டும். அந்த வகையில், பயனாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கசியவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த சர்ச்சையை முடிவதற்குள்ளாக அடுத்த சிக்கலில் மாட்டியிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். அதாவது சுமார் 15 லட்சம் இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் பாஸ்வோர்டுகளை, சாதாரணமாக ஃபேஸ்புக் ஊழியர்கள் பார்க்கக் கூடிய அளவில், எழுத்து வடிவிலேயே (plain text) சேமித்து வைத்திருந்ததாம். அத்தகைய பாஸ்வோர்டுகள் வெளியே கசிதிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால், இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் உடனடியாக தங்களது பாஸ்வோர்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அதே பாஸ்வோர்டை வேறு சில தளங்களின் ஐ.டி.களில் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதையும் மாற்ற வேண்டும். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close