இலங்கை குண்டு வெடிப்பு- கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 22 Apr, 2019 04:47 pm
security-tightened-in-coastal-areas

இலங்கையை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இந்தியாவில் புகுந்துவிடாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையில் ஈஸ்டா் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 300 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் காயமடைந்த 500க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையடுத்து இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை ஊரடங்கு நிலை விலக்கிகொள்ளப்பட்ட நிலையில் இலங்கையில் மேலும் பதற்றம் நிலவியதால் இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கையை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் இந்திய கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் இந்தியாவில் புகுந்துவிடாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படையின் விமானங்களும் இந்திய கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close