இலங்கை குண்டுவெடிப்பில் 10 இந்தியா்கள் பலி- சுஷ்மா சுவராஜ் தகவல்

  ஸ்ரீதர்   | Last Modified : 23 Apr, 2019 01:02 pm
sushma-swaraj-confirms-death-of-10-indians-in-sri-lanka-easter-blasts

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தில் வழிபாடு நடத்தியவர்களை குறி வைத்து தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இந்த கொடூர சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சம் உறுதி செய்துள்ளது.

இன்று மேலும் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்து இருப்பதை சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்ககத்தில் இன்று உறுதி செய்துள்ளார். இதன் மூலம் 10 இந்தியர்கள் இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்திருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close