அசாமில் தனது வாக்கினை பதிவு செய்தார் மன்மோகன் சிங்!

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 04:42 pm
former-pm-manmohan-singh-casts-vote-in-dispur

முன்னாள் பிரதமரும், நிதியமைச்சருமான மன்மோகன் சிங், அசாம் மாநிலம் திஸ்பூரில் அவருடைய வாக்கினை பதிவு செய்தார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதில், மூன்றாம் கட்ட தேர்தல் இன்று ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்று வருகிறது. இரண்டு யூனியன் பிரதேச தொகுதிகள் உள்ளிட்ட 15 மாநிலங்களில் மொத்தம் 117 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அசாம் மாநிலம் திஸ்பூர் தொகுதியிலும் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் மன்மோகன் சிங், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அவரது வாக்கினை பதிவு செய்தார். உடன் அவரது மனைவியும் வந்து வாக்களித்தார். 

1991ஆம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பியாக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close