புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பினர் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 06:43 pm
entire-jaish-e-mohammed-terror-team-involved-in-pulwama-attack-eliminated-within-45-days

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வமாவாவில், சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பினர் முற்றிலும் ஒடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பிப்., 14ல் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கம் வகையில், பாகிஸ்தானின் பாலகோட்டில், குண்டு மழை பொழிந்த இந்திய விமானப்படை, அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது. 

இதில், பயங்கரவாதிகள், அவர்களின் பயிற்சியாளர்கள் பலர் சாம்பலானதாக விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நம் நாட்டில், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில், நம் வீரர்கள் முழு மூச்சில் ஈடுபட்டனர். 

இதன் பலனா, ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே போல், பயங்கரவாதிகள் சிலர், கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், புல்வாமா சம்பவத்திற்கு காரணமாக இருந்த, 66 பயங்கரவாதிகள், 45 நாட்களுக்குள் ஒடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நடவடிக்கையில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், தேசிய பாதுகாப்பு அமைப்பினர் என பல தரப்பினரும், இரவு, பகல் பாராது தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன் பலனாக, புல்வாமா சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close