முன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது 

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 03:17 pm
nd-tiwari-s-son-death-case-apoorva-tiwari-the-wife-of-rohit-has-been-arrested

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் என்.டி. திவாரியின் மகன் மர்ம மரணம் தொடர்பாக வழக்கில், அவரது மருமகளை டெல்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித், 40, கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், "ரோஹித் தலையணையால் அழுத்தப்பட்டதில், மூச்சுத் திணறி இறந்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரது மர்ம மரணம் குறித்து டெல்லி போலீஸார் ரோஹித்தின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக என்.டி. திவாரியின் மருமகளை, அதாவது ரோஹித்தின் மனைவியான அபூர்வா திவாரியை, டெல்லி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குடும்ப வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து  அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வரின் மகன் மரணம் தொடர்பாக வழக்கில்,  அவரது மருமகளையே போலீ்ஸ் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close