இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர் இலங்கை தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல்

  Newstm Desk   | Last Modified : 24 Apr, 2019 11:46 am
is-suspect-arrested-in-india-gave-infor-about-lanka-attacks

இந்தியாவில் ஐ.எஸ். ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், இலங்கை தாக்குதல் குறித்த விவரங்களை முன்கூட்டியே தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அந்தத் தாக்குதல்கள் குறித்து இலங்கைக்கு இந்தியா சார்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கூட இதை உறுதி செய்திருந்தனர்.

இந்நிலையில், தீவிரவாதத் தாக்குதலுக்கான சதி குறித்து இந்தியாவுக்கு எப்படி தெரியவந்தது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அண்மையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் இலங்கையில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பது குறித்து தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையிலேயே இலங்கையை இந்தியா எச்சரித்தது என்பது தெரியவந்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close