மம்தா பானர்ஜி வாழ்க்கை வரலாற்று டிரைலரை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

  ஸ்ரீதர்   | Last Modified : 24 Apr, 2019 01:34 pm
ec-orders-removal-of-trailer-of-mamata-banerjee-s-biopic-from-internet


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாகினி- பெங்கால் டைக்ரஸ் என்ற பெங்காலி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நேஹல் தத்தா என்பவர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ரூமா சக்கரவர்த்தி என்பவர் மம்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மக்களவை தேர்தல் முடியும் வரை இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது  என உத்தரவிடவேண்டும் என்று கோரி அந்த மாநில பா.ஜ.க சார்பில் மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகினி திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close